ஐ.நா. பொதுப் பேரவையின் 76ஆவது அமர்வு நிறைவு
2022-09-13 10:41:56

ஐ.நா. பொது பேரவையின் 76ஆவது அமர்வின் நிறைவுக் கூட்டம் செப்டம்பர் 12ஆம் நாள் நடைபெற்றது. அதில், 76ஆவது அமர்வு தலைவர் ஷஹீத் உரை நிகழ்த்தினார். ஹங்கேரி வெளியுறவு அதிகாரி கொரோஸி உறுதி மொழி கூறி, ஐ.நா. பொதுப் பேரவையின் 77ஆவது அமர்வின் தலைவராகப் பதவியேற்றார்.

ஷஹீத் நிகழ்த்திய உரையில் நம்பிக்கையை வைத்திருப்பதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நம்பிக்கை இழப்புதான் உண்மையான நெருக்கடி என்றும், மனிதகுலத்தின் உள்ளார்ந்த ஆற்றலை உறுதிப்படுத்தவும், மனிதர்கள் ஒன்றுபட்டால் தலைசிறந்து நிலையில் அற்புதத்தைப் படைக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளவும் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா. தலைமைச் செயலாளர் குட்ரெஸ் கூறுகையில், பலதரப்புவாதம் மனிதருக்கு ஒரேயொரு நம்பிக்கையாகும் என்று தெரிவித்தார். ஷஹீத்தின் நெடுநோக்குப் பார்வையையும் தலைமைத் திறனையும் பாராட்டிய அவர், கொரோஸியுடன் ஒத்துழைப்பதை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

திட்டப்படி, ஐ.நா. பொது பேரவையின் 77ஆவது அமர்வு செப்டம்பர் 13ஆம் நாள் துவங்குகிறது.