இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு
2022-09-13 10:40:49

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 51ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கையின் மனித உரிமை நிலைமை பற்றி செப்டம்பர் 12ஆம் நாள் நடைபெற்ற உரையாடல் கூட்டத்தில் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள இதர சர்வதேச அமைப்புகளுக்கான சீனப் பிரதிநிதி சென் சூ உரை நிகழ்த்தினார்.

மனித உரிமைகளை ஆக்கப்பூர்வமாக மேம்படுத்தி பாதுகாப்பதில், குறிப்பாக, நல்லிணக்கம், மறுசீரமைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றை முன்னேற்றுவதில் இலங்கை மேற்கொண்டுள்ள விடா முயற்சிகளை சீனா பாராட்டுகிறது. இலங்கையின் பாரம்பரிய நட்பார்ந்த அயல் நாடான சீனா, இலங்கைக்கு உறுதியான ஆதரவளிப்பதோடு, இலங்கை அரசு மக்களுக்குத் தலைமை தாங்கி தற்காலிக இன்னல்களைச் சமாளிக்க முடியும் எனவும் நம்புகிறது என்று தெரிவித்தார்.

மேலும், எந்த நாடும் இலங்கையின் நிலைமையைப் பயன்படுத்தி நிலவியல் சார் சுயலாபம் அடைவதை சீனா எதிர்க்கிறது. சொந்த நாட்டின் நிலைமைக்கிணங்க மனித உரிமை வளர்ச்சிக்காக இலங்கை தெரிவு செய்த பாதைக்கு குறிப்பிட்ட தரப்புகள் மதிப்பளிக்கவும், மனித உரிமை விவகாரத்தைப் பயன்படுத்தி, அரசியல் நிர்ப்பந்தம் தணித்து அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் செயலைக் கைவிடவும் வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.