விண்ணில் ஏவப்பட்ட "ஜோங் சிங் 1E" செயற்கைக்கோள்
2022-09-14 17:11:49

சீனாவின் வென் ச்சாங் விண்வெளி ஏவு தளத்திலிருந்து லாங்மார்ச்-7 ஏவூர்தி மூலம் "ஜோங் சிங் 1E" செயற்கைக்கோள் செப்டம்பர் 13ஆம் நாளிரவு 9:18 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது தடையின்றி திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நுழைந்துள்ளது. ஏவுதல் கடமை முழுமையான வெற்றியைப் பெற்றது.

"ஜோங் சிங் 1E" செயற்கைக்கோள், உயர்தர குரல், தரவு, வானொலி மற்றும் தொலைக்காட்சி பரிமாற்ற சேவைகளைப் பயன்பாட்டாளருக்கு முக்கியமாக வழங்குகின்றது.

இது, லாங்மார்ச் ஏவூர்திகள் தொகுதியின் 437வது செலுத்தும் பணியாகும்.