பொருளாதார மறுமலர்ச்சிக்கு துணைக் குழு:இலங்கை
2022-09-14 12:47:56

பொருளாதார மறுமலர்ச்சிக்கான துணைக் குழுவின் உருவாக்கத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர் ரமேஷ் பத்திரன செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

கொழும்புவில் ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் விரைவு முடிவுகளை எடுக்க இக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

பொருளாதார மீட்சி பற்றிய பல்வேறு துறைகளில் பல நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அவற்றை இக்குழு மேற்பார்வையிடவும், அவற்றுக்கு நெடுநோக்கு வழிகாட்டல் வழங்கவும் முடியும் என்றும் அவர் கூறினார்.

இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்ராமசிங்கே இக்குழுவின் தலைவராகவும், தலைமை அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்பட 5 அமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாகவும் பொறுப்பு வகிக்க உள்ளனர்.