மீண்டும் தோல்வியடைந்த அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் சூழ்ச்சி
2022-09-14 10:46:23

அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பை நியாயமாக மாற்ற முயன்ற அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா 4ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளன. சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் செப்டம்பர் 12ஆம் நாள் எடுத்த முடிவின்படி, இம்மூன்று நாடுகளின் அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு, இந்நாடுகளால் மட்டுமே கையாளப்படுவது என்று அல்லாமல், இந்நிறுவனத்தின் உறுப்பு நாடுகளால் கூட்டாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்ட அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா, இவ்வுடன்படிக்கையின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவை சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் செயற்குழு ஏற்றுக் கொண்ட குறிப்பிட்ட தீர்மானத்தைப் பொருப்படுத்தாமல், தங்கள் அணு ஆயுதப் பரவல் செயல்களை மூடிமறைக்கும் விதம், இந்நிறுவனத்தின் செயலகத்துடன் அணு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்புக்கான உத்தரவாதம் மற்றும் கண்காணிப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்த முயன்றன.

அணு ஆயுத நிலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம், குறிப்பிட்ட தொழில் நுட்பங்கள் மற்றும் சாதனங்களின் ஒப்படைப்பு ஆகியவற்றுடன் இத்தகைய ஒத்துழைப்பு தொடர்புடையது. இதில் அணு ஆயுதப் பரவல் ஆபத்து நிலவுகிறது. அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையின் நோக்கம் மற்றும் கோட்பாடுகளை இது மீறியுள்ளதோடு, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் கீழுள்ள செயலகத்தின் பொறுப்பு வரம்பையும் தாண்டியுள்ளது. இத்தகையை உண்மையை அவை எந்த சூழ்ச்சியைச் செய்தாலும் மாற்ற முடியாது.

தற்போது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் செயற்குழு கூட்டத்தில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் சூழ்ச்சி 4ஆவது முறை தோற்கடிக்கப்பட்டது. அணு ஆற்றல், அணு ஆயுதம் ஆகியவை தொடர்பான விவகாரங்களில் இந்த நாடுகளின் இரட்டை வரையறை தெளிவாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளதை இது காட்டுகிறது.