மனித உரிமை வளர்ச்சிப் பாதை சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் பன்னாடுகளின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்
2022-09-14 10:31:52

ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையரின் அறிக்கை குறித்து ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் 51ஆவது கூட்டத்தில்  13ஆம் நாள் பொது விவாதம் நடைபெற்றது. அதில் ஜெனிவாவிலுள்ள ஐ·நா அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள பிற சர்வதேச அமைப்புகளுக்கான சீனப் பிரதிநிதி சென் சியு 30க்கும் அதிகமான நாடுகளின் சார்பாக உரைநிகழ்த்தினார். பொருளாதாரம், சமூகம் மற்றும் பண்பாட்டு உரிமை, வளர்ச்சி உரிமை, சுகாதார உரிமை ஆகியவற்றுக்கான முக்கியத்துவம் மற்றும் ஒதுக்கீட்டை மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அலுவலகம்(OHCHR) அதிகரிக்க வேண்டும். பல்வேறு நாடுகள், சொந்த அந்நாட்டின் நிலைமைக்கிணங்க, மனித உரிமை வளர்ச்சிப் பாதையைச் சுயமாகத் தேர்வு செய்வதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், ஒரு நாட்டின் ஒப்புதலின் அடிப்படையில் மனித உரிமைக்கான தொழில்நுட்ப உதவியை ஆக்கப்பூர்வமாக வழங்க வேண்டும். பல்வேறு தரப்புகளிடையில் ஆக்கமுள்ள பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை நடத்துவதற்கான மேடையாக மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அலுவலகம் மாற வேண்டும் என்றும் சென் சியு சுட்டிக்காட்டினார்.