இலங்கையில் 2023 இல் விவசாய நவீனமயமாக்கல் திட்டம்
2022-09-15 17:52:02

இலங்கையில் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு உணவளிப்பதற்கும், உணவுப் பொருட்களின் நிகர ஏற்றுமதி நாடாக மாறுவதற்கும் 2023 ஆம் ஆண்டில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று இலங்கை அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளதாக அரசுத்தலைவர் ஊடகப் பிரிவு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்கான பல்துறை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் விக்ரமசிங்கே  இதனைத் தெரிவித்தார்.

விவசாயத்தை நவீனமயமாக்குவதன் மூலம் உற்பத்தி மற்றும் போட்டியாற்றலை அதிகரித்து அன்னியச் செலாவணியை ஈட்ட முடியும் என்று விக்ரமசிங்கே  கூறினார்.