அமெரிக்க சமூகத்துக்குப் பெரும் பயம் கொண்டு வந்த துப்பாக்கி வன்முறை
2022-09-15 10:40:24

கடந்த வார இறுதியில், அமெரிக்காவின் இல்லினாய்ஸ், கென்டக்கி, பென்சில்வேனியா, நியூயார்க் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்தன. அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை ஆவணக்காப்பகம் எனும் இணையதளத்தில் செப்டம்பர் 12ஆம் நாள் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இவ்வாண்டிலிருந்து அமெரிக்காவில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துப்பாக்கி வன்முறையால் உயிரிழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 122 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கி வன்முறை செயல், அமெரிக்க சமூகத்தைச் சூழ்ந்த பெரும் பயமாகும். இதில், பள்ளிகள் தான், துப்பாக்கி வன்முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கள் அழுத்தத்தின் மிக முக்கிய ஊற்றுமூலம் துப்பாக்கி வன்முறை என அமெரிக்காவில் 75 விழுக்காடு இளம் வயதினர்கள் கருதுகின்றனர் என்பதை மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்று காட்டுகிறது.

உலகளவில் மிக வளர்ந்த நாடான அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் ஏன் அவ்வப்போது ஏற்பட்டன? அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின் 2ஆவது திருத்தத்தில் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை தொடர்பான விதிகள் மாற்றப்படுவது கடினம் என்றும், துப்பாக்கி கட்டுப்பாட்டில் அந்நாட்டின் இரு கட்சிகள் கருத்து வேற்றுமை கொண்டுள்ளன என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனிடையே, குறிப்பிட்ட குழுக்களின் நிர்ப்பந்தத்தில் அமெரிக்காவின் துப்பாக்கி கட்டுப்பாட்டின் நடைமுறையாக்கம் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிட்-19 நோய் தொற்று பரவலுக்குப் பிறகு, பொது மக்களிடையில் பல அழுத்தங்களால் அதிகரித்து வரும் மனநிறைவின்மை, துப்பாக்கி வன்முறை சம்பவங்களைத் தூண்டியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.