2022 தைவான் கொள்கை மசோதாவுக்கு சீனா கடும் எதிர்ப்பு
2022-09-15 17:54:45

2022ம் ஆண்டு தைவான் கொள்கை தொடர்பான மசோதா, அமெரிக்க நாடாளுமன்ற மேற்சபையின் வெளிவிவகார ஆணையத்தால்  ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் 15ஆம் நாள் தெரிவித்தார்.

தேசிய இறையாண்மை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டை உறுதியாகப் பேணிக்காக்க, சீனா, அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும். நாட்டின் முழுமையான ஒன்றிணைப்பு போக்கை முன்னெடுப்பதில் சீனா ஊன்றி நிற்கும் என்றும் மௌ நிங் வலியுறுத்தினார்.