இந்தியாவின் மொத்த விற்பனை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 12.41 சதவீதமாக குறைவு
2022-09-15 17:50:49

இந்தியாவின் மொத்த விற்பனை விலைக் குறியீடு, ஆகஸ்ட் மாதத்தில் 12.41 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டைக் காட்டிலும், இவ்வாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட பணவீக்கம், கனிம எண்ணெய்கள், உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், இரசாயனங்கள் மற்றும் இரசாயன பொருட்கள், மின்சாரம், உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வினால் ஏற்பட்டது.

மொத்த விற்பனை சந்தையில் விலைகளின் குறிகாட்டியாக கருதப்படும் மொத்த விற்பனை பணவீக்கம், உலகளவில் பொருட்களின் விலைகளின் ஏற்றத்தாழ்வினால் உயர்கிறது அல்லது குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.