2022ஆம் ஆண்டு ஆசியான் நாடுகளின் கூட்டாளி செய்தி ஊடகங்களின் ஒத்துழைப்பு மன்றம்
2022-09-15 16:48:26

செப்டம்பர் 15ஆம் நாள், சீன ஊடகக் குழுமமும் குவாங்சி சுவான் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசும் கூட்டாக ஏற்பாடு செய்த 2022ஆம் ஆண்டு ஆசியான் நாடுகளின் கூட்டாளி செய்தி ஊடகங்களின் ஒத்துழைப்பு மன்றம், நான்னின் நகரில் நடைபெற்றது. 17 நாடுகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட செய்தி ஊடகங்கள் மற்றும் நிறுவனங்களின் ஏறக்குறைய  180 சீன மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் நேரடியாகவும் இணையவழியிலும் இம்மன்றத்தில் கலந்து கொண்டனர்.

இம்மன்றம் ஆசியான் நாடுகளின் செய்தி ஊடகங்களுடன் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பைச் சீன ஊடகக் குழுமம் மேம்படுத்துவதற்கு ஒரு புதிய வடிவமாகும். சீன ஊடகக் குழுமமும் ஆசியான் நாடுகளின் செய்தி ஊடகங்களும் கூட்டாக பொறுப்பை ஏற்று, சீனாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான மக்களிடையேயான பிணைப்புகள், பண்பாட்டுப் பரிமாற்றங்கள், பயனுள்ள ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக பாலாகப் பங்காற்ற வேண்டும் என்று சீன ஊடகக் குழுமத்தின் துணைத் தலைவர் யென் சியாமிங் தெரிவித்தார்.

மேலும், சீன ஊடகக் குழுமத்துக்கும் குவாங்சி சுவான் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசுக்குமிடையிலான நெடுநோக்கு ஒத்துழைப்பு கட்டுக்கோப்பு உடன்படிக்கையில் இரு தரப்புகள் கையொப்பமிட்டன.