மேலை நாடுகளின் ஒருசார்பு கட்டாய நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு
2022-09-15 16:36:25

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 51ஆது கூட்டத் தொடரில், ஒருசார்பு கட்டாய நடவடிக்கைக்கான சிறப்பு அறிக்கையாளருடனான உரையாடல் கூட்டம் செப்டம்பர் 14ஆம் நாள் நடைபெற்றது. அதில் சீனப் பிரதிநிதிக் கூறுகையில், ஒருசார்பு கட்டாய நடவடிக்கை சர்வதேச சட்டத்தைக் கடுமையாக மீறியுள்ளது. அமெரிக்கா மற்றும் சில மேலை நாடுகள் சொந்த உள்நாட்டு சட்டங்களின்படி ஒருசார்பு கட்டாய நடவடிக்கையை மேற்கொண்டு, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றன. பரந்தளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இச்செயல், உண்மையான மனித உரிமை மீறல் ஆகும் என்று சுட்டிக்காட்டினார்.

மற்ற நாடுகள் மீது சட்ட விரோதமாக ஒருசார்பு கட்டாய நடவடிக்கையை மேற்கொள்வதை சீனா எப்போதுமே எதிர்க்கிறது. குறிப்பிட்ட நாடுகள் இத்தகைய நடவடிக்கையை உடனே ரத்து செய்து, இதனால் மனித உரிமைக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.