ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 22வது கூட்டத்தில் ஷிச்சின்பிங் உரை
2022-09-16 20:23:09

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 16ஆம் நாள் சமர்கண்ட் சர்வதேசக் கூட்ட மையத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவின் 22வது கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அவர் பேசுகையில், தற்போது, உலகம் கொந்தளிப்பான மாற்றத்தின் புதிய காலகட்டத்தில் நுழைகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாறிவரும் சர்வதேச நிலைமையைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். மேலும் உறுதியான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான பொது எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில், இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு 2000 சட்ட அமுலாக்கப் பணியாளர்களுக்குச் சீனா பயிற்சி அளித்து, பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களுக்கான சீனா-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பயிற்சித் தளத்தைக் கட்டியமைக்கும். சீனா-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பெருந்தரவு ஒத்துழைப்பு மையத்தை நிறுவும். சீனா-ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பனி விளையாட்டு மாதிரி மண்டலத்தை உருவாக்கும் என்று அவர் அறிவித்தார். மேலும், வளரும் நாடுகளின் தேவைக்கிணங்க 15 கோடி யுவான் மதிப்புள்ள தானியங்கள் உள்ளிட்ட அவசர மனித நேய உதவிகளை சீனா வழங்கும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடுத்த தலைவர் பதவி வகிக்கும் நாடான இந்தியாவுக்குச் சீனா வாழ்த்து தெரிவிக்கின்றது. பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, தலைவர் பதவி வகிக்கும் இந்தியாவின் பணிகளை ஆதரிக்கச் சீனா விரும்புகின்றது என்று அவர் தெரிவித்தார்.