ஆக்ஸ்ட் சீனப் பொருளாதாரம் தொடர்ந்து மீட்சி
2022-09-16 18:46:28

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 16ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஆக்ஸ்ட் திங்களில் தேசியப் பொருளாதாரம் தொடர்ந்து மீட்சி அடைந்து வருகிறது. நிலையாக உயர்ந்து வரும் உற்பத்தி தேவை, நிதானமான வேலை வாய்ப்பு மற்றும் விலைவாசி நிலைமை ஆகியவற்றுடன், பெரும்பாலான குறியீடுகள் கடந்த மாதத்தை விட சிறப்பாக உள்ளன. ஆக்ஸ்ட் திங்களில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.2 விழுக்காடு அதிகரித்தது. அதுவும், கடந்த மாதத்தில் இருந்ததை விட 0.4 விழுக்காடு அதிகமாகும். இவ்வாண்டு ஜனவரி முதல் ஆக்ஸ்ட் வரை நாடளவில் நகரங்களில் 89 இலட்சத்து 80 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.