2030க்குள் இந்தியாவில் 10,000 மின்சார வாகன மின்னேற்றிகள்
2022-09-16 18:53:46

2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதிலும் 10,000 மின்சார வாகன மின்னேற்றிகளை நிறுவ திட்டமிட்டுள்ளது என்று, பிரிட்டனின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல்லின் இந்திய துணை நிறுவனத்தின் அறிக்கையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெல் நிறுவனம் முதல் கட்டமாக, பெங்களூருவில் ஐந்து இடங்களில் அமைந்துள்ள எரிபொருள் நிலையங்களில் மின்னேற்றிகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. மேலும், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, அசாம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் அதன் மின்னேற்றி சந்தையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டிற்குள் மின்சார வாகனங்கள், தனியார் வாகனங்களில் 30 விழுக்காடு, வணிக வாகனங்களில் 70 விழுக்காடு, பேருந்துகளில் 40 விழுக்காடு மற்றும் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் 80 விழுக்காடு வகிக்க வேண்டும் என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.