2வது முறையாக விண்கலத்தை விட்டு வெளியேறிய ஷென்சோ-14 குழு
2022-09-17 19:23:55

சீன விண்வெளி நிலையத்தில் ஆய்வு ஈடுபட்டு வரும் ஷென்சோ-14 குழு சனிக்கிழமை பிற்பகல் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் 2ஆவது முறையாக விண்கலத்தை விட்டு வெளியேறி திட்டமிடப்பட்ட கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றியது. கிட்டத்தட்ட 5 மணி நேரம் நீடித்த கடமைகளில்,  கருவிகளின் பொருத்தம், விண்கலத்தின் வெளியே மீட்புதவிச் சோதனை உள்ளிட்ட முயற்சிகளை  மேற்கொண்டது.

முன்னதாக செப்டம்பர் 1ஆம் நாள், ஷென்சோ-14 குழுவினர்கள் முதல்முறையாக விண்கலத்தை விட்டு வெளியேறி பணி புரிந்தனர்.