6% தாண்டிய அமெரிக்க வீட்டுக் கடன் வட்டி விகிதம்
2022-09-17 16:35:22

அமெரிக்காவில் 30 ஆண்டுகள் வரை வீட்டுக் கடனுக்கான  நிலையான வட்டி விகிதம் சராசரியாக 6 விழுக்காட்டைத் தாண்டியது. 2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்டது முதல் இதுவரை மிக அதிகமான பதிவு இதுவாகும். அமெரிக்காவில் வீடு வாங்கவிருக்கும் பலருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தொடர்ச்சியான வட்டி வகித உயர்வு பொருளாதார தேக்க நிலை அல்லது வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடும். இதனால், வீட்டுக் கடன் பல அமெரிக்க குடும்பங்களுக்குப் பெரிய நிதி சுமையாக மாறும் என கூறப்படுகிறது.