இத்தாலியில் கனமழையால் 10பேர் பலி
2022-09-17 16:45:09

இத்தாலியின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 10பேர் உயிரிழந்தனர், 4பேரை காணவில்லை.

குறிப்பிட்ட பகுதிகளில் சில மணிநேரம் பெய்த மழை அளவு, பொதுவாக அரையாண்டின் அளவுக்கு சமம் என்று உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

இவ்வாண்டில், உயர் வெப்பம் உள்ளிட்ட தீவிர வானிலையால் இத்தாலி பாதிப்பு அடைந்தது. கோடைக்காலத்தில் நிலவும் கடும் வெப்பம், வறட்சி, பல ஆண்டுகளில் இல்லாத ஆற்று நீர் மட்டம் குறைவு முதலிய காரணங்களால், விவசாய உற்பத்தி மூன்றில் ஒரு பகுதிக்கும் கூடுதலாக குறைக்கப்படும்.