எதிர்பார்த்ததை விட அதிகரித்த சீனப் பொருளாதாரம்
2022-09-17 16:01:02

சீனப்பொருளாதாரம் ஆகஸ்டு திங்களில் தொடர்ந்து மீட்சித்தன்மையை காட்டியதாக, சீனத் தேசிய புள்ளியியல் பணியகம் 16ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதில், சீன வாகனச் சந்தையில் விற்பனை அதிகரிப்பு, சீனப் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகளில் ஒன்றாகும். வாகனங்களின் உற்பத்தி அளவு 39 விழுக்காட்டாகவும், வாகனத் தொழிற்துறையின் கூட்டு மதிப்பு, 30விழுக்காட்டுக்கும் மேலாகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்டு திங்களில் சீனப் பொருளாதாரத்தின் செயல்திறனை விரித்துரைக்கும் போது, எதிர்பார்த்ததை விட அதிகம் போன்ற வார்த்தையை வெளிநாட்டு செய்தி ஊடகங்கள்  பயன்படுத்தியுள்ளன.

சிக்கலான சர்வதேச சூழல், உள்நாட்டில் கோவிட்-19 பரவல் மற்றும் அதிதீவிர வெப்பநிலை  ஆகிய அறைகூவல்களை எதிர்கொண்டு, சீனப் பொருளாதார வளர்ச்சியில் இத்தகைய சாதனை பெறுவது எளிமையானதல்ல.

மேலும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, பன்னாட்டு மத்திய வங்கிகள் அடுத்தடுத்து வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இந்நிலையில், உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி அடைய சாத்தியம் இருக்கும் என்று உலக வங்கியின் புதிய ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் ஜுலை திங்களின் இறுதியில்,  உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பை மீண்டும் குறைத்துள்ளது.

இந்தப் பின்னணியில், சீனா முனைப்புடன் செயல்பட்டு பெற்றுள்ள குறிப்பிடத்தக்க சாதனைகள்,  சீனப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் அதேவேளையில், உலகிற்கு நம்பிக்கையை உயர்த்தும்.  5ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி கண்காட்சி விரைவில் நடைபெறவுள்ளது. சீனச் சந்தையில் உலக நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு மேலதிக வாய்ப்புகளை இக்கண்காட்சி கொண்டு வரும்.