உத்தரப்பிரதேசத்தில் கனமழையால் 22பேர் பலி
2022-09-18 16:14:06

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழைக்கு, தற்போது வரை 22பேர் உயிரிழந்தனர்.

கடந்த 36 மணிநேரம் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால், இம்மாநிலத்தின் பல இடங்களில் மழை நீர் தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தவிர, வரும் 20ஆம் நாள் முதல், இந்தியாவின் கிழக்குப் பகுதியில் சுமார் 3முதல் 4 நாட்கள் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.