உலக அமைதி மற்றும் செழுமைக்குப் பங்களிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
2022-09-18 16:40:35

21 ஆண்டுகால வளர்ச்சியுடன் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உலகளவில் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பாக மாறியுள்ளது. இவ்வாண்டு, சில புதிய உறுப்பு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கான கூட்டாளி நாடுகளும் இவ்வமைப்பில் சேர்ந்துள்ளன. நண்பர்கள் குழு இடைவிடாமல் விரிவாகி வருகிறது. அரசியல் ரீதியில் பரஸ்பர நம்பிக்கை, கூட்டு நலன் மற்றும் ஒத்துழைப்பு, சமத்துவம், திறப்பு மற்றும் உள்ளிடக்கிய தன்மை, நீதி மற்றும் நியாயம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதே இந்த வெற்றிக்கான காரணங்களாகும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் 40த்துக்கும் அதிகமான ஆவணங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொருளாதாரம், நிதி, அறிவியல் தொழில்நுட்பம், மானிட பண்பாடு, அமைப்பு முறைக் கட்டுமானம், தூதாண்மைத் தொடர்பு உள்ளிட்ட துறைகள் அடக்கம். மேலும், சர்வதேச எரிசக்தி பாதுகாப்பைப் பேணிக்காப்பது, சர்வதேச உணவுப் பாதுகாப்பைப் பேணிகாப்பது, காலநிலை மாற்றத்தின் சமாளிப்பு, நிலையான பாதுகாப்பான விநியோக சங்கிலியைப் பேணிக்காப்பது ஆகியவற்றைக் குறித்து 4 முக்கிய அறிக்கைகளும் வெளியியப்பட்டுள்ளன. உலகளாவிய நெருக்கடி மற்றும் அறைகூவலைச் சமாளிப்பதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் இவையாகும். உலகளவில் பிரிவினை மற்றும் நெருக்கடியை உண்டாக்கும் சில நாடுகள் மற்றும் குழுக்களின் செயலுக்கு முற்றிலும் மாறாக எஸ்சீஒ-வின் செயல்பாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.