கியூஷு தீவைத் தாக்கிய "நன்மடு" என்னும் சூப்பர் சூறாவளி
2022-09-19 15:33:50

"நன்மடு" என்னும் சூப்பர் சூறாவளி செப்டம்பர் 18ஆம் நாள் ஜப்பானின் கியூஷு தீவிலுள்ள ககோஷிமா மாநிலத்தின் ககோஷிமா நகருக்கு அருகில் தரையிறங்கியது.

அதிகபட்சமாக காற்றின் வேகம் வினாடிக்கு 45 மீட்டர். கியூஷீ மின்சார நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, சூறாவளியால் கியூஷு பிரதேசத்திலுள்ள சுமார் 1 இலட்சத்து 90 ஆயிரம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது.

அதே போல், பல்வேறு ஜப்பானிய இருப்புப் பாதை நிறுவனங்கள் மற்றும் விமானச் சேவை நிறுவனங்கள் தொடர்புடைய போக்குவரத்து சேவைகளை ரத்து செய்துள்ளன. 19ஆம் நாள் மீண்டும் தொடங்குமா என்பது சூறாவளியின் நிலைமையைப் பொறுத்து முடிவெடுக்கப்படும்.

20ம் நாள் வரை, சூறாவளி ஜப்பான் முழுவதும் பரவி, பெரும் அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.