குறைந்த வருமானமுடைய நாடுகளுக்குக் கல்வி நிதியுதவி:ஐ.நா
2022-09-19 14:51:52

இடைநிலை மற்றும் குறைந்த வருமானமுடைய நாடுகளின் இளைஞர்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்குக் கல்வி நிதியுதவியை அளிக்கும் வகையில் ஐ.நா 17ஆம் நாள் சர்வதேசக் கல்வி நிதி திரட்டல் முறைமையை வெளியிட்டது. அன்று ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ், ஐ.நா சர்வதேசக் கல்வியின் சிறப்பு தூதர் புரான் ஆகியோர் ஐ.நா தலைமையகத்தில் இது குறித்து செய்தியாளர் கூட்டம் நடத்தினர்.

குட்ரேஸ் கூறுகையில், கல்வியானது, அமைதி, செழுமை மற்றும் சமூக நிதானத்துக்கான முக்கிய காரணியாகும். பல வளரும் நாடுகளுக்கு, கல்வி ரீதியில் அவசர ஆதரவு தேவைப்படும். அந்த நாடுகளின் இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் வீடுவாசலின்றி அல்லல்பட்ட குழந்தைகளின் கல்விக்கு, இம்முறைமை உதவியளிக்கும் என்று தெரிவித்தார்.

இம்முறைமையின் மொத்த உதவித் தொகை 1ஆயிரம் கோடி டாலரை எட்டும். அதன் முதலாவது தொகுதி திட்டப்பணிகள், 2023ம் ஆண்டில் துவங்கவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.