சீனப் பொருளாதாரத்தின் ஒட்டுமோத்த நிலை மீட்சி அடைதல்
2022-09-19 19:00:42

சீனப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிலை மீட்சி அடைந்து வருவதை முக்கிய பொருளாதாரக் குறியீடுகள் காட்டுகின்றன என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் திங்கள்கிழமை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது. இதில், மக்களின் நுகர்வு பழக்கம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றது. முதல் 8 திங்களில், சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை தொகையின் கூட்டு அதிகரிப்பு சதவீதம், எதிர்மறை எண்ணிலிருந்து நேர்மறை எண்ணாக மாறியுள்ளது. மேலும், கடந்த ஆகஸ்ட் திங்களில், குறிப்பிட்ட அளவுக்கு மேலான வருமானமுடைய தொழிற் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.2விழுக்காடு அதிகரித்தது. குறிப்பாக, சாதனத் தயாரிப்புத் தொழில், மின்சார வாகனத் தயாரிப்பு, நகரும் தொலைத் தொடர்புச் சாதனம், சூரிய மின்கலம் முதலிய தயாரிப்புகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டன.