நேட்டோவிலிருந்து விலக வேண்டும்:பிரான்ஸ் ஆர்ப்பாடக்காரர்கள்
2022-09-19 15:51:24

ரஷியா மீது பிரான்ஸ் மேற்கொண்ட தடையால் ஏற்பட்ட எரியாற்றல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரான்ஸின் பாரிஸில் ஆயிரக்கணக்கானோர் 17ஆம் நாள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரஷிய-உக்ரைன் மோதல் ஏற்பட்டதற்கும் தீவிரமாகியுள்ளதற்கும் காரணம், நேட்டோ ஆகும். நேட்டோவைப் பின்பற்றி, ரஷியா மீது தடை விதிப்பது, மோதலைத் தணிப்பதற்குப் பதிலாக, பிரான்ஸில் எரியாற்றல் விலை உயர்வு, விநியோகக் கட்டுப்பாடு முதலிய பின்விளைவுகளை பொது மக்களுக்குக் கொண்டு வந்துள்ளது. அதனால், பிரான்ஸ் அரசு தடை நடவடிக்கைகளை உடனே நிறுத்தி, நேட்டோவிலிருந்து விலக வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.