7ஆவது சீன-யுரேசியக் கண்காட்சி துவக்கம்
2022-09-19 19:05:23

7ஆவது சீன-யுரேசியக் கண்காட்சி 19ஆம் நாள் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரில் துவங்கியது. கூட்டு கலந்தாய்வு, கூட்டு கட்டுமானம், கூட்டு பகிர்வு மற்றும் ஒத்துழைப்புடன் எதிர்காலத்தை வரவேற்பது நடப்பு கண்காட்சி கருப்பொருளாகும். 4 நாட்கள் நீடிக்கும் இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சீன வணிகத் துறை அமைச்சகம், சீன வர்த்தக முன்னேற்ற மன்றம், சின்ஜியாங் தன்னாட்சிப் பிரதேச அரசு முதலியவற்றால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.