அமோக விளைச்சலுக்கு வேளாண் காப்புறுதி உத்தரவாதம்
2022-09-19 14:53:35

சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகத்தின் புதிய தரவுகளின்படி, இவ்வாண்டில் 1 கோடியே 13 இலட்சத்து 30 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் இலையுதிர்கால விளைச்சல் பெறப்பட்டுள்ளது. அது மொத்த தானிய விளைச்சலில் 13.3 விழுக்காடு வகிக்கிறது.

தானியங்களின் அமோக அறுவடையில் வேளாண் காப்புறுதி முக்கியப் பங்கு ஆற்றி வருகிறது. தற்போது, சீனாவில் இயற்கை ரப்பர், எண்ணெய் பயிர்கள் உள்ளிட்ட 16 வகை மொத்த வேளாண் பொருட்கள் மற்றும் சுமார் 60 சிறப்பு வாய்ந்த வேளாண் பொருட்களுக்கு, வேளாண் காப்புறுதி மானியம் வழங்கப்படுகிறது. தேசிய வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை, தானியப் பாதுகாப்பு முதலியவற்றுடன் தொடர்புடைய முக்கிய வேளாண் பொருட்கள் பெரும்பாலும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.