சீன- யூரேசிய கண்காட்சிக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2022-09-19 19:09:56

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் திங்கள்கிழமை 7ஆவது சீன- யூரேசிய கண்காட்சிக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில், யூரேசிய கண்டத்தில் வளர்ச்சிக்கான உயிர்ச்சக்தி மற்றும் வாய்ப்புகள் நிறைந்திருக்கும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான பன்னாட்டு ஒத்துழைப்புக்கான முக்கிய பிராந்தியம் என்றார். மேலும், நிலவியல் ரீதியான சாதகங்களைப் பயன்படுத்தி, சீனாவுக்கும் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே சாலை இணைப்பு,  ஒத்துழைப்பு, கூட்டு வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதில், சீனாவின் சின்ஜியாங் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளுடன் இணைந்து, சீன - யூரேசிய கண்காட்சியை மேடையாக கொண்டு, அமைதி மற்றும் ஒத்துழைப்பு, திறந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, கூட்டு வெற்றி ஆகிய கொள்கைகளைப் பின்பற்றி,  ஆசிய-ஐரோப்பிய ஒத்துழைப்புத் துறைகளை விரிவாக்கி, ஒத்துழைப்பு நிலையை மேம்படுத்த சீனா விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.