பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்
2022-09-20 10:09:29

கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானின் சில பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு காய்ச்சலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் மொத்தம் 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாகாண சுகாதாரத் துறை திங்கள்கிழமை இரவு தெரிவித்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில்பதிவாகியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 1,610 மற்றும் இவ்வாண்டு மொத்தமாக 4,980 ஐ எட்டியுள்ளது.

இதனிடையில், பஞ்சாப் மாகாணத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை 3,437 ஆக உயர்ந்துள்ளது. 

பாகிஸ்தான் அரசு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட டெங்கு எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. டெங்கு பரவுவதைத் தடுக்கும் வகையில் டெங்கு காய்ச்சல் அதிகமுள்ள இடங்களில் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றது.