அமெரிக்காவுடனான உறவுகளில் சீனாவின் நிலைப்பாடு:வாங் யீ
2022-09-20 17:27:14

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, செப்டம்பர் 19ஆம் நாள் நியூயார்க்கில் அமெரிக்க-சீன உறவுகளுக்கான தேசியக் கமிட்டி, அமெரிக்க-சீன வர்த்தக கவுன்சில், அமெரிக்க வணிகச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் உரையாடி கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.

சீன-அமெரிக்க உறவு இருநாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட பிறகு தாழ்ந்த நிலையில் சிக்கியுள்ளதால், இருநாடுகளுக்கிடையே புதிய பனிப்போர் ஏற்படும் என பலர் கவலைப்படுவதாக வாங் யீ தெரிவித்தார். இருதரப்பு உறவின் வளர்ச்சி குறித்து 5 துறைகளில் சீனாவின் உறுதித்தன்மையை அவர் விளக்கிக் கூறுகையில், சீனாவின் எதிர்கால வளர்ச்சி, சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணியில் சீனாவின் மன உறுதி, அமெரிக்கா மீதான சீனாவின் கொள்கை, இருநாட்டு வர்த்தக ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து வலுப்படுத்த விரும்பும் மனப்பான்மை, அமெரிக்காவுடன் பலதரப்பு ஒருங்கிணைப்பு மேற்கொள்வதில் சீனாவின் விருப்பம் ஆகியவை உறுதித்தன்மையுடன் இருக்கும் என்று தெரிவித்தார்.

அமெரிக்க-சீன வர்த்தக ஒத்துழைப்பு இருதரப்புக்கும் உண்மையான நலன்களைக் கொண்டு வந்துள்ளது. சீனாவில் நீண்டகாலத்துக்கு செயல்பட அமெரிக்க தொழில் நிறுவனங்கள் விரும்புகின்றன என்று அமெரிக்க தரப்பினர் தெரிவித்தனர்.