ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்புடன் கைதிகள் பரிமாற்றம்:பைடன்
2022-09-20 15:43:58

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அமெரிக்கப் பொறியியலாளர் மார்க் ஃப்ரீரிச்ஸை விடுவித்துள்ளது. அதற்கு ஈடாக, தலிபான் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பழங்குடியின் தலைவர் பஷீர் நுர்சாயையும் அமெரிக்கா விடுவித்தது என்று 19ஆம் நாள் அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

2020ஆம் ஆண்டின் ஜனவரி திங்களில் மார்க் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டு, 31 மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டார்.

இந்தப் போர்க் கைதிகளின் பரிமாற்றம், "நீண்டகால பேச்சுவார்த்தைகளுக்கு" பிறகு அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாடாகும் என்று ஆப்கானிஸ்தானின் தற்காலிக அரசின் வெளியுறவு அமைச்சர் முட்டாகி கூறினார்.