லத்தின் அமெரிக்க குடியேறுவோரின் மோசமான கொடுங்கனவு
2022-09-20 12:54:07

எங்களைப் பொருத்த வரை அனைத்தும் முடிவடைந்துள்ளது என்று மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு தாய் கூறினார். அவருடைய மகன் மிச்சேல் கடந்த ஜுன் திங்கள் அமெரிக்காவின் டெக்சாஸில் குடியேறுவோர் துயர நிகழ்ச்சியில் உயிர் இறந்தார். இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2022ஆம் நிதியாண்டில், 782 பேர் மெக்சிகோ-அமெரிக்க எல்லையைக் கடந்த போது உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்க சுங்க துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வெண்ணிக்கை வரலாற்றில் மிக உயர் பதிவாகும்.

நடைமுறையில், குடியேறுவோர் தொடர்பான துயர நிகழ்ச்சி, அமெரிக்காவின் குழப்பமான குடியேறுவோர் கொள்கையுடன் நேரடியாகத் தொடர்புடையது. குறிப்பாக, இப்பிரச்சினை அமெரிக்காவின் இரு கட்சிப் போட்டியில் அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாண்டில், பைடன் அரசின் குடியேறுவோர் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சில மாநில ஆளுனர்கள் குடியேறுவோர்களைப் பல முறை ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக்கீழுள்ள பிரதேசங்களுக்கு அனுப்பினர். இத்தகைய கட்சிப் போட்டியில் குடியேறுவோர்களின் மனித உரிமை யாராலும் கவனிக்கப்படவில்லை.

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் கட்டுரையாளர் கூறியதைப் போல், “அமரிக்காவின் எல்லைப் பகுதி ஒரு மாபெரும் கல்லறையாக மாறியுள்ளது.”