உலகப் பாதுகாப்பு ஆலோசனைகளைச் செயல்படுத்த வேண்டும்:சீனா
2022-09-20 10:31:22

பல்வேறு தரப்புகள் உலகப் பாதுகாப்பு ஆலோசனைகளைச் செயல்படுத்தி, உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறையாக்க வேண்டுமென சீனப் பிரதிநிதி 19ம் நாள், ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 51ஆவது கூட்டம், ஜனநாயகம், நியாயம் மற்றும் சர்வதேச ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளுக்கான தனிப்பட்ட நிபுணர்கள் கூட்டம் ஆகியவற்றில் வேண்டுகோள் விடுத்தார்.

மனித உரிமை பிரச்சினையை அரசியல்மயமாக்கி, சொந்த வசதிக்காகப் பயன்படுத்துவதை, சர்வதேச சமூகம் கூட்டாக எதிர்க்க வேண்டும். சீனா முன்வைத்த உலகப் பாதுகாப்பு ஆலோசனைகள், அமைதி பற்றாக்குறை மற்றும் உலகின் சிக்கலான பாதுகாப்பு நிலைமையின் தணிவுக்கு வழிவகுத்து, பொதுப் பாதுகாப்புத் துறையில் உலகிற்கு அளித்த தயாரிப்பாகும் என்று அவர் கூறினார்.