சீனாவில் நல்ல காற்றின் தரம் கொண்ட சராசரி நாட்களின் விகிதம் அதிகரிப்பு
2022-09-20 15:44:38

நாடளவில் சுற்றுப்புற காற்றின் தர நிலைமையைப் பற்றி சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 20ஆம் நாள் அறிவித்தது. ஜனவரி முதல் ஆகஸ்டு வரை, சீனாவிலுள்ள மாவட்ட நிலை மற்றும் மாவட்ட நிலைக்கு மேலான 339 நகரங்களில் நல்ல காற்றின் தரம் கொண்ட சராசரி நாட்களின் விகிதம் 86.3 விழுக்காடாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தின் நிலைமைக்குச் சமமாகும்.

ஆகஸ்டு திங்களில், பெய்ஜிங்-தியான்ஜின்-ஹெபே மற்றும் சுற்றியுள்ள நகரங்களில் சராசரி நல்ல நாட்களின் விகிதம் 85.0 விழுக்காடாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 15.1 விழுக்காடு அதிகமாகும். பி எம் 2.5 எனும் நுண்ணிய துகள்களின் செறிவு, கன மீட்டருக்கு 23 மைக்ரோகிராம் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட  14.8 விழுக்காடு குறைவாகும்.