77ஆவது ஐ.நா பேரவையின் பொது விவாதம் துவக்கம்
2022-09-21 10:32:22

77ஆவது ஐ.நா பேரவையின் பொது விவாதம் 20ம் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் துவங்கியது. பன்னாடுகளின் தலைவர்கள், அரசின் பிரதிநிதிகள் முதலியோர், உக்ரைன் நிலைமை, காலநிலை மாற்றம், கோவிட்-19 நோய் பரவல், பல்வகை நெருக்கடிகள், உலகின் வளர்ச்சி, ஐ.நா சீர்திருத்தம் உள்ளிட்ட பொது அக்கறை கொண்ட பல பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து, சமாளிப்பு வழிமுறைகளை விவாதிக்கவுள்ளனர்.

இதில் ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸ் உரை நிகழ்த்துகையில், தற்போதைய உலகம், பெரும் தொல்லையில் சிக்கியுள்ளது. அமைதியை நனவாக்கும் ஐ.நாவின் மையக் கடமைகளை பன்னாடுகள் பேணிக்காத்து, சர்வதேசச் சட்டத்துக்கு மதிப்பளித்து, பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.