ஹாங்காங் மற்றும் மக்கௌவில் ஒரு நாட்டில் இரு அமைப்புமுறைகளின் சிறப்பான நடைமுறையாக்கம்
2022-09-21 10:42:28

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை 20ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தி, புதிய காலத்தில் ஹாங்காங் மற்றும் மக்கௌவில் ஒரு நாட்டில் இரு அமைப்புமுறைகள் கொள்கையின் நடைமுறையாக்கத்தை அறிமுகப்படுத்தியது. இதில், சீன அரசவையின் ஹாங்காங் மற்றும் மக்கௌ விவகார அலுவலகத்தின் துணைத் தலைவர் ஹுவாங் லியூசியூவாங் கூறுகையில்,

ஹாங்காங் மற்றும் மக்கௌ பணி பற்றி அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஒரு தொகுதி புதிய கருத்துக்களையும் புதிய சந்தினையையும் புதிய நெடுநோக்குத் திட்டத்தையும் முன்வைத்துள்ளார். இவை புதிய காலத்தில் ஒரு நாட்டில் இரு அமைப்புமுறைகள் கொள்கையின் நடைமுறையாக்கத்துக்கு அடிப்படை விதிகளை வழங்கி, ஹாங்காங் மற்றும் மக்கௌ பணி புதிய சாதனைகளைப் பெறுவதற்கான அடிப்படை காரணங்களாக மாறியுள்ளன.

தாய் நாட்டின் முழு ஆதரவுடன் ஹாங்காங்கின் பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகின்றது. அதன் சர்வதேச நிதி, கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தக மையம் என்ற அதன் தகுநிலை மேலும் வலுவடைந்து வருகின்றது. குறிப்பாக ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, ஹாங்காங்கின் மீதான உள்ளூர் மக்கள் மற்றும் பன்னாட்டு மூலதனங்களின் நம்பிக்கை இடைவிடாமல் அதிகரித்து வருகின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டது.