தியன்வென்-1 கடமைக் குழுவுக்கு அதியுயர் விருது
2022-09-21 17:06:05

சீனாவின் முதலாவது செவ்வாய் கிரக ஆய்வுக்கான தியன்வென்-1 கடமைக் குழுவுக்கு, அண்மையில் பாரிஸில் நடைபெற்ற 73ஆவது சர்வதேச விண்வெளி மாநாட்டில், உலக விண்வெளி விருது வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி சம்மேளனத்தின் ஆண்டுக்கான அதியுயர் நிலையிலான இவ்விருதை, இதற்கு முன்பு சீனாவின் சாங்ஏ-4 கடமைக் குழு பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

தியன்வென்-1 கடமையில், செவ்வாய் கிரத்தைச் சுற்றிச் செல்வது, அதில் தரையிறங்குவது, ரோந்து ஆய்வு மேற்கொள்வது ஆகிய பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரே கடமையில் இத்தகைய 3 இலக்குகளை நனவாக்குவது, மனிதகுல வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தியன்வென்-1 விண்கலனின் ஆர்பிட்டர் சுற்றுவட்டப் பாதையில் ஆய்வு மேற்கொண்டு, அறிவியல் தரவுகளைச் சேகரித்து வருகிறது.