5ஆவது சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சிக்கு ஊடகப் பதிவு துவக்கம்
2022-09-21 14:03:53

படம்:CFP

5வது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி 2022ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது.

செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 10 வரை www.ciie.org எனும் இப்பொருட்காட்சின் இணையதளம் மற்றும் செல்லிடப் பேசி செயலி முதலிய அதிகாரப்பூர்வ தளங்களின் மூலம் செய்தியாளர்கள் பதிவு செய்யலாம். தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டுச் செய்தியாளர்கள், சீனாவிலுள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்கள், ஹாங்காங் மற்றும் மக்கெள செய்தியாளர்கள், தைவான் செய்தியாளர்கள் ஆகியோர் நடப்புப் பொருட்காட்சியில் முக்கியமாக அழைக்கப்படுகின்றனர்.