பசுமை வளர்ச்சி, நிலையான வளர்ச்சி, மீட்பு பற்றி பிரிக்ஸ் சுற்றுலா அமைச்சர்கள் விவாதித்தனர்
2022-09-21 10:55:52

திங்களன்று, பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத் துறை  அமைச்சர்கள் காணொளி வழியாக நடைபெற்ற சந்திப்பின் போது பசுமை வளர்ச்சி, நிலையான வளர்ச்சி மற்றும் மீட்பு பற்றிய தலைப்புகளில் ஆழமாக விவாதித்தனர்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகள் வளமான சுற்றுலா வளங்களை கொண்டுள்ளதாகவும், உலக சுற்றுலாத் துறையில் முக்கியப் பங்காற்றுகிறது என்றும்  சீனாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஹு ஹெபிங் இக்கூட்டத்தில் கூறினார்.

நடைமுறை ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும், சுற்றுலாவின் மீட்சியை மேலும் துரிதப்படுத்துவதற்கும் முயற்சிகள்  மேற்கொள்ள வேண்டும் என்று ஹூ வலியுறுத்தினார். பசுமைக் கொள்கைகளைப் பின்பற்றி, சுற்றுலாவின் நிலையான வளர்ச்சியை அதிகரிக்க கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஹூ மேலும் கூறினார்.

சுற்றுலா தொடர்பான சமீப ஆண்டுகளில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பைப் பாராட்டி, தொழில்துறையின் மீட்சியின் அவசரத்தை ஒப்புக்கொண்ட அமைச்சர்கள், சுற்றுலாத்துறையின் நெகிழ்ச்சியான, ஒருங்கிணைப்பான மற்றும் நிலையான வளர்ச்சிக்காக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தனர்.