2030ஆம் ஆண்டு நிழ்ச்சிநிரலுக்கான 7 அம்ச நடவடிக்கைகள் - வாங்யீ அறிவிப்பு
2022-09-21 20:15:15

உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்பைத் தொடங்கிய நாடாகவும் உலகின் மிகப் பெரிய வளரும் நாடாகவும் விளங்கும் சீனா, ஐ.நா.வின் வளர்ச்சி அமைப்புகளின் இணைப்பை வலுப்படுத்தவும், உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்புக்கான நண்பர்கள் குழுவிலுள்ள நாடுகளுடன் 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் விதமாக 7 அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விரும்புகிறது என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ தெரிவித்தார்.

செப்டம்பர் 20ஆம் நாள், நியூயார்க்கில் நடைபெற்ற உலகளாவிய வளர்ச்சி முன்னெடுப்புக்கான நண்பர்கள் குழுவின் அமைச்சர் நிலை கூட்டத்திற்கு தலைமை தாங்கிய வாங் யீ இதைத் தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பு, தானிய பாதுகாப்பு, தொழில்மயமாக்கம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த உலக வளர்ச்சி முன்னெடுப்பின் முதற்கட்ட செயல்திட்டங்களின் பட்டியலை வெளியிடுதல், தானிய உற்பத்திக்கான சிறப்பு நடவடிக்கையை ஊக்குவித்தல்,  உலகின் தூய்மை எரிசக்தி ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை முன்னெடுத்தல், நுண்ணறிவுசார் சுங்கத்துறை ஒத்துழைப்பை முன்னேற்றுதல், உலக எண்முறை கல்விக் கூட்டணியை உருவாக்குதல், நெகிழிப்பொருட்களுக்குப் பதிலாக மூங்கில் பொருட்களின் பயன்பாட்டுத் திட்டத்தை வகுத்தல், நிலையான வளர்ச்சிக்கான அறிவியல் செயற்கைக் கோள்-ஒன்றின் தரவுகள் உலகளவில் பகிர்தல் ஆகிய 7 நடவடிக்கைகள் அடக்கம்.