அமெரிக்கச் சிறைப்பிடிப்புப் பிரச்சினைக்கு சீனா கண்டனம்
2022-09-21 10:31:04

செப்டம்பர் 19ஆம் நாள் ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 51ஆவது கூட்டம் மற்றும் தன்னிச்சையான சிறைப்பிடிப்புப் பிரச்சினைக்கான பணிக்குழுவுடனான பேச்சுவார்த்தையில் சீனப் பிரதிநிதி உரைநிகழ்த்துகையில், சொந்த மனித உரிமை பிரச்சினையை அமெரிக்கா சரிவர நோக்க வேண்டுமென தெரிவித்தார்.

2021ம் ஆண்டில் சுமார் 17 இலட்சம் குடியேறுவோரை அமெரிக்கா தடுப்புக் காவலில் வைத்துள்ளது. அவர்களில் 45 ஆயிரம் குழந்தைகள் உட்பட, 80 விழுக்காட்டினர் தனியார் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் விசாரணை இல்லாமல், பலர் அமெரிக்காவினால் குவேன்டனமோ சிறையில் வைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என்றும் சீனப் பிரதிநிதி தெரிவித்தார்.