2022ஆம் ஆண்டு சர்வதேச அமைதி நாள் பற்றிய நிகழ்ச்சி
2022-09-21 19:08:01

2022ஆம் ஆண்டு சர்வதேச அமைதி நாள் பற்றிய நிகழ்ச்சி புதன்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறுகையில்,

சர்வதேச பாதுகாப்புச் சூழலில் ஆழ்ந்த மற்றும் சிக்கலான மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், உலகம் புதிய கொந்தளிப்புக் காலக் கட்டத்தில் நுழைந்துள்ளது. இந்த முக்கிய தருணத்தில், உலக பாதுகாப்பு முன்மொழிவை வழங்கினேன். பல்வேறு நாடுகளின் இறையாண்மை மற்றும் உரிமைப் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டை மதித்து, ஐ.நா. சாசனத்தின் குறிக்கோள் மற்றும் கொள்கையைக் கடைபிடித்து, பாதுகாப்பு மீதான பன்னாடுகளின் அக்கறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலமாக நாடுகளுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும். அமைதியைப் பேணிக்காக்கும் பொறுப்புடன், அமைதியான வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றி, மனித குலத்திற்கான பகிர்வு எதிர்காலம் கொண்ட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.