மின்னணுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் சீனா உலகின் முதலிடம்
2022-09-21 15:41:14

சீன மின்னணுப் பொருட்களின் உற்பத்தியும் விற்பனையும் உலகளவில் முதலிடம் வகிக்கின்றன என்று சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 20ஆம் நாள் தெரிவித்தது. உலகளாவிய முக்கிய மின்னணுப் பொருட்களின் உற்பத்தித் தளமாகச் சீனா விளங்குகிறது. உலகின் முக்கிய மின்னணு பொருட்களின் தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவில் உற்பத்தி தளம் மற்றும் ஆய்வு மையத்தை நிறுவியுள்ளன. 2012முதல் 2021ஆம் ஆண்டு வரை சீனாவின் மின்னணு பொருள் தயாரிப்புத் துறையின் அதிகரிப்பு மதிப்பு ஆண்டுக்குச் சராசரியாக 11.6விழுக்காடு அதிகரித்துள்ளது. அதன் வருவாய் 7லட்சம் கோடி யுவானிலிருந்து 14லட்சத்து 10ஆயிரம் கோடி யுவானாக உயர்ந்துள்ளது.