நேபாளத்தின் முக்கிய ஏற்றுமதி பொருளாக விளங்கும் மின்சாரம்
2022-09-21 10:54:55

நேபாள மின்சார ஆணையம் செவ்வாயன்று ஒர் அறிக்கையில், ஜூன் தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் நடுப்பகுதி வரை இந்தியாவிற்கு, 719 கோடி நேபாள ரூபாய் மதிப்புள்ள மின்சாரத்தை ஏற்றுமதி செய்ததாகக் கூறியது.

சோயாபீன் எண்ணெய், பாமாயில், நூல், கம்பளி கம்பளம், சணல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு அடுத்தபடியாக, மின்சாரம் நேபாளத்தின் ஏழாவது பெரிய ஏற்றுமதிப் பொருளாக இந்த வருவாயை ஈட்டியுள்ளது.

ஜூலை நடுப்பகுதியில் தொடங்கிய 2022-23 நிதியாண்டில், மின்சார ஏற்றுமதி மூலம் 1600 கோடி நேபாள ரூபாய்களை  ஈட்டுவதை நேபாள மின்சார ஆணையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மின் ஏற்றுமதியில் இருந்து அதிகரித்து வரும் வருவாய் நேபாளத்திற்கு போதுமான அந்நிய செலாவணி இருப்புக்களை பராமரிக்கவும், இந்தியாவுடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் உதவுகிறது என்று நேபாள மின்சார ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் குல்மன் கிசிங் கூறினார்.