ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் வாங் யீ சந்திப்பு
2022-09-22 15:42:07

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செப்டம்பர் 21ஆம் நாள் நியூயார்க்கில் ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் சந்திப்பு நடத்தினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு முழு வெற்றியடைய லாவ்ரோவ் வாழ்த்து தெரிவித்தார். ஐ.நா. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் அமைப்பு முதலிய சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகளில் இரு நாடுகளுக்குமிடையிலான ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் சமர்கண்டில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, புதிய ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர். ரஷியாவுடன் இணைந்து இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களைப் பன்முகங்களிலும் பயனுள்ள முறையிலும் செயல்படுத்த சீனா விரும்புகின்றது என்று வாங் யீ தெரிவித்தார்.