காலநிலை மாற்றத்துக்கான உயர்நிலை கூட்டத்தில் வாங்யீ உரை
2022-09-22 15:17:27

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும், சீன அரசவையின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ செப்டம்பர் 21ஆம் நாள் ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற காலநிலை மாற்றத்துக்கான உயர்நிலை கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், பூமி, ஒரு பெரிய குடும்பம். மனித குலம், ஒரு பொது சமூகம். காலநிலை மாற்றம், நமது பொது அறைகூவல். அதனால் இவற்றைக் கூட்டாகச் சமாளிக்க வேண்டும் என்று அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்பு குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் பசுமை மற்றும் கரி குறைந்த வளர்ச்சிக்காகச் சீனா மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகளையும் வாங்யீ இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.