பிரான்ஸ் அரசுத் தலைவரின் வெளியுறவு ஆலோசகருடன் வாங் யீ சந்திப்பு
2022-09-22 10:53:11

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செப்டம்பர் 21ஆம் நாள் நியூயார்க்கில் பிரான்ஸ் அரசுத் தலைவரின் வெளியுறவு ஆலோசகர் போனாவுடன் சந்திப்பு நடத்தினார்.

ஐ.நா. பொது பேரவையின் பொது விவாதத்தில் உக்ரைன் நெருக்கடி பற்றிய பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோனின் கருத்துக்களைப் போனா விவரித்தார். சீனாவுடன் இணைந்து பரிமாற்றத்தையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தி, போரை நிறுத்தவும், அமைதியை மேம்படுத்தவும் கூட்டாகப் பாடுபட பிரான்ஸ் விரும்புகின்றது என்றார்.

"புதிய பனிப்போருக்கு" பிரான்ஸ் அரசுத் தலைவர் மக்ரோனின் எதிர்ப்பு தெரிவிப்பதைச் சீனா பாராட்டுகிறது. இணக்க முயற்சியைப் பிரான்ஸ் தரப்பு ஆக்கப்பூர்வமாக மேற்கொள்வதைச் சீனா ஆதரிக்கின்றது. பேச்சுவார்த்தையின் மூலம் போர் நிறுத்தத்தை விரைவில் நனவாக்க வேண்டும் என்று வாங் யீ விருப்பம் தெரிவித்தார்.