கடலுக்குக் கழிவு நீர் வெளியேற்றத்துக்கு ஜப்பான் மக்கள் எதிர்ப்பு
2022-09-23 15:18:50

ஃபுகுஷிமா அணு உலையின் கழிவு நீரைக் கடலில் வெளியேற்றும் திட்டத்தை எதிர்க்கும் விதமாக, ஜப்பானின் அரசு சாரா அமைப்புகள் பல, 21ஆம் நாள்  டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் மற்றும் ஜப்பான் பொருளாதாரத் துறை அமைச்சகத்துக்கு 42 ஆயிரம் பேரின் கூட்டுக் கையொப்பம் சமர்ப்பித்துள்ளன.

2011ம் ஆண்டில் ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் மிக உயர்நிலையிலான அணு கசிவு விபத்து ஏற்பட்டது. அதனால் ஜப்பானின் பல நிலங்கள் மற்றும் பக்கத்திலுள்ள கடல் பரப்பு மாசுபடுத்தப்பட்டன. இவ்விடங்களில் உற்பத்தியான உணவுப்பொருட்களுக்கு, பல நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டது.

பசுமை அமைதி நிறுவனத்தின் அணுத் துறை நிபுணர்கள் முன்பு குறிப்பிடுகையில், ஜப்பானின் அணு கழிவு நீர், வரும் ஆயிரம் ஆண்டுகளில் அபாயமாக அமையும். மரபணுக்களுக்கும் கழிவு நீரால் தீங்கு ஏற்படக் கூடும் என்று தெரிவித்தனர்.

ஃபுகுஷிமா அணு உலையின் கழிவு நீரைக் கையாள்வது, உலகின் கடல் உயிரினச் சூழல் பாதுகாப்பு மற்றும் பன்னாட்டு மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. ஜப்பான் அரசு, இந்த அபாயமான வெளியேற்றத் திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும்.