கொந்தளிப்பான உலகிற்கு உறுதித்தன்மை:சீனா
2022-09-27 14:20:42

கடந்த வாரத்தில், சீனப் பிரதிநிதிக் குழு, ஐ.நாவின் 77ஆவது பேரவையின் பொது விவாதத்தில் உரை நிகழ்த்தி, பலதரப்பு கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர் பத்துக்கும் மேலான வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பாளர்களுடன்  சந்திப்பு நடத்தியுள்ளார். இந்தத் தூதாண்மை முயற்சிகள், கொந்தளிப்பான உலகிற்கு மதிப்புள்ள உறுதித்தன்மையைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ரஷிய-உக்ரைன் மோதல், உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கான மிக சிக்கலான சவாலாகும். இது குறித்து கூடிய விரைவில் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டும் என்றும், தற்சார்பு தடை நடவடிக்கைகளைத் தாறுமாறாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் சீனப் பிரதிநிதி வேண்டுகோள் விடுத்தார். உக்ரைன் வெளியுறவு அமைச்சர் கூறுகையில், சீனாவின் சர்வதேசத் தகுநிலை மற்றும் செல்வாக்கிற்கு உக்ரைன் முக்கியத்துவம் அளிக்கிறது. தற்போதைய நெருக்கடியைத் தணிப்பதில் சீனா முக்கிய பங்கு ஆற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். அமைதிக்கான சீனாவின் இணக்க முயற்சி, சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றதை இது காட்டியுள்ளது.

தவிரவும், சீனாவின் தலைமையிலான உலக மேம்பாட்டு முயற்சியின் நண்பர்கள் குழுக் கூட்டத்தில் 10 சர்வதேச நிறுவனங்கள் மற்றும் 60 நாடுகளைச் சேர்ந்த உயர்நிலை பிரதிநிதிகள் பங்கெடுத்தனர். இக்கூட்டத்தில், வறுமை குறைப்பு, தானியப் பாதுகாப்பு முதலியவற்றில் புதிதாக 7 நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சீனா அறிவித்துள்ளது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த ஆலோசனைகள், தற்போதைய சவால்களைத் தீர்ப்பதற்கு வழிமுறைகளை கொடுக்கும் என்று நடப்பு ஐ.நா பேரவையின் தலைவர் கொரோசி சுட்டிக்காட்டினார்.

சீனா, கொந்தளிப்பான உலகிற்குக் கொண்டு வந்த இம்மதிப்புமிக்க உறுதித்தன்மை, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னெடுக்கும் சக்தியாகக் கருதப்படுகிறது.