அமெரிக்காவின் என்.எஸ்.ஏ இணையத் தாக்குதல் பற்றிய விவரம் வெளியீடு
2022-09-28 14:20:04

சீனாவின் வடமேற்குத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மீது வெளிநாட்டில் இருந்து நடத்தப்பட்ட இணையத் தாக்குதல் பற்றிய 2ஆவது ஆய்வு அறிக்கை 27ஆம் நாள் வெளியிடப்பட்டது.

சீனத் தேசிய கணினி வைரஸ் அவசர பதில் மையமும் 360 நிறுவனமும் கூட்டாக வெளியிட்ட அந்த அறிக்கையில்,

அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பான என்.எஸ்.ஏவின் டாவ் எனும் அலுவலகம், வடமேற்குத் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மீது இணையத் தாக்குதல் நடத்தியதன் மூலம், சீனாவின் அடிப்படை வசதிகளில்  இணைய  ஊடுருவலை நிகழ்த்தி, சீன இணையப் பயன்பாட்டாளர்களின்  ரகசிய தரவுகளைத் திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், அமெரிக்கா நீண்டகாலமாவும் பெருமளவிலும் இணையம் மூலம் உளவு பார்ப்பது பரவலாக அறியப்பட்டதே. இணையக் கண்காணிப்பில் அமெரிக்காவின் பேராசை புதிய செய்தியில்லை. தங்கள் கூட்டணி நாடுகள் உள்ளிட்ட முழு உலகத்தையும் உளவுப் பார்க்க அமெரிக்கா விரும்புகிறது என்று பிரான்ஸ் நாட்டின் 24மணி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஆனால் என்.எஸ்.ஏ இணையத் தாக்குதலை எப்படி கொடுக்கிறது பற்றி வெளியுகம் குறைவாகவே அறிந்து கொள்ள முடிகிறது. சீனாவின் தொடர்புடைய நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கைகளில், வடமேற்கு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மீது அமெரிக்கா இணையத் தாக்குதல் நடத்திய நெறி, நேரம் ஆகிய விவரங்கள், அதில் ஏற்பட்ட தவறுகள் கூட உறுதியான சான்றுகளுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதலை நடத்திய 13 பேரின் உண்மையான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சீனா மீது தீய நோக்கிலான இணையத் தாக்குதலை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். சீனா வெளியிட்ட அறிக்கைக்கு அமெரிக்க தரப்பு பொறுப்புணர்வுடன் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.